நிதர்சனம் உங்களுக்கு சொல்ல விரும்புவது

10 months ago

 சர்வதேச பரப்பில் இயங்கும் you tube நிறுவனங்கள், எதிர்காலத்தில் உண்மையை சொல்லும் ஊடகங்களுக்குரிய தார்மீக கடமையை கடைப்பிடிக்கும்படி நினைவுறுத்த விரும்புகின்றோம்.

தேசிய தலைவரினதும், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் தொடர்பாகவும் ஆதாரமற்ற செய்திகள் பரபரப்புக்காக வெளியிடக்கூடாது என்பதை கடுமையாக தெரிவித்துக் கொள்கின்றோம்.

'தலைவரின் உறவுகள்' என்று உரிமை கோருபவர்களும், எதிர்காலத்தில் அவர்கள் தொடர்பான பதிவுகளையோ கருத்துக்களையோ ஊடகங்களில் பகிர்ந்து கொள்வதை தவிர்த்துக் கொள்ளும்படி வேண்டிக்கொள்கின்றோம்.

மீறி செயற்படடால் கடும் கண்டனத்திற்கு ஆளாகுவீர்கள். கடந்த காலங்களில் சர்வதேச அரசியல் பிரிவு என்ற தோரணையில், ஒரு குழுக்களின் அறிக்கைகளை வன்மையாக கண்டிக்கின்றோம்.

இதுவரைக்கும் அதிகாரபூர்வமாக எந்த விதமான ஒரு பிரிவும் நியமிக்கப்படவில்லை. தன்னிச்சையாக, தங்களை தாங்களே பிரகடனப்படுத்தி உள்ளார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.

                                                                                                                - நிதர்சனம் -

                                                                                                                       

அண்மைய பதிவுகள்