யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 350 கிரா மங்கள் துரிதகதியில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.
நாடு முழுவதும் 5 ஆயிரம் கிராமங் களை, அபிவிருத்தி செய்யும் சனச தேசிய அபிவிருத்தி வேலைத் திட்டத்தின் யாழ். மாவட்டத்துக்கான கலந்துரையாடல் நேற்று வியாழக்கிழமை காலை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியொன்றில் இடம்பெற்றது. இதன்போதே, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 350 கிராமங்களை அபி விருத்தி செய்வது தொடர்பில் ஆராயப்பட்டது.
கலந்துரையாடலில் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வடக்கு மாகாணப் பிரதம செயலாளர் இ.இளங்கோவன், யாழ். மாவட்ட பதில் செயலாளர் ம.பிரதீபன், சனச சங்கத்தின் தலைவர், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். குறித்த வேலைத் திட்டத்தின் ஊடாகப் புதிய வேலைவாய்ப்புகள் பலவற்றை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
