இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம் இன்று மட்டகளப்பில் தற்போது இடம்பெறுகின்றது






இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம் இன்று மட்டகளப்பில் தற்போது இடம்பெறுகின்றது.
இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம் இன்று(16-02-2025) மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் இடம்பெறுகின்றது.
களுவாஞ்சிகுடியில் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் அலுவலகத்தில் இந்த மத்தியகுழு கூட்டம் நடைபெற்று வருகின்றது.
இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்று வருகின்றது.
இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், இரா.சாணக்கியன், ஞா.சிறிநேசன், இ.சிறிநாத் உட்பட பல மத்தியகுழு உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் என பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது உயிரிழந்த தமிழ் அரசுக் கட்சியின் முன்னாள் தலைவர்கள், உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் பதில் தலைவர் தலைமையில் கூட்டம் ஆரம்பமானதும் குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
