
பூநகரி வனத்துறை காரியாலய அதிகாரிகள் இருவரை அப்பிரதேசத்தில் வசிக்கும் நபர் ஒருவர் மரக்கட்டையால் தாக்கியதால் காயமடைந்த இருவர் பூநகரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பூநகரி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பூநகரி பிரதேசத்தில் காடுகளை வெட்டியமை தொடர்பாக சில மாதங்களுக்கு முன் கைதுசெய்யப்பட்ட ஒருவர் மது அருந்திவிட்டு வன காரியாலயத்தின் யன்னல்களை உடைத்து அரச உடமைகளுக்கு சேதம் விளைவித்ததாக பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.
அதன்படி தாக்கிய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
