
கிளிநொச்சி - இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோரமோட்டை ஆற்றில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை கிளிநொச்சி பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து இன்று(23.07.2024) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, மணல் அகழ்வில் ஈடுபட்ட மூன்று உழவியந்திரங்களுடன் நான்கு சந்தேக நபர்களை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்து இராமநாதபுரம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக இராமநாதபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
