தமிழகத்தின் திருச்சியிலுள்ள இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் வசிப்பவர்களிடம் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் சிறப்புக் பொலிஸ் உதவி ஆய்வாளர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி சுப்பிரமணியபுரம் கொட்டப்பட்டு பகுதியில் உள்ள இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் உள்ளவர்கள் பணி நிமித்தமாக வெளியே செல்லும்போது அதற்கான காரணங்களை அங்குள்ள பதிவேட்டில் பதிவிட வேண்டும்.
இதனை கண்காணிப்பதற்காக அதிகாரி ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளார்.இந்த நிலையில் அங்கு மேற்பார்வை செயற்பாடுகளில் ஈடுபடும் கே.கே. நகர் பொலிஸ் நிலையச் சிறப்பு உதவி ஆய்வாளர் இலங்கை தமிழர்களிடம் லஞ்சம் கோரியுள்ள தாக முறைப்பாடு எழுந்துள்ளது.
இதனடிப்படையில், அவருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அத்துடன், அவருக்கு எதிரான குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பதனால் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
