இணையவழி குற்றச் செயல்கள் அதிகரிப்பு.-- இலங்கை கணினி அவசர தயார் நிலைக் குழுவின் அதிகாரி தெரிவிப்பு.
5 months ago

இணையவழி குற்றச் செயல்களில் குறிப்பிட்ட அளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசர தயார் நிலைக் குழுவின் அதிகாரி சாருகா தமுனுபொல தெரிவித்தார்.
இந்த வருடத்தில் இதுவரை மொத்தம் 2,000 இணைய அச்சுறுத்தல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
அவர் மேலும் தெரிவிக்கையில் - சமீபத்திய மாதங்களில் இணையவழி குற்றச் செயல்கள் தொடர்பில் 9,500 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இவற்றில் 981 முறைப்பாடுகள் பாலியல் துஷ்பிரயோகம் சம்பந்தப்பட்டவை என்பதுடன், இணைய வழி பாதுகாப்பு முறைமையே இதற்கு காரணம்.
இணையவழி அச்சுறுத்தல்கள் தவிர, இணைய மோசடிகள் சம்பந்தப்பட்ட கிட்டத்தட்ட 1,600 சம்பவங்கள் சமீப காலங்களில் பதிவாகியுள்ளன - என்றார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
