சூடான் கார்ட்டூமினின் புறநகர்ப் பகுதியில் இராணுவ விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 46 பேர் உயிரிழந்தனர்

2 months ago



சூடானின் தலைநகர் கார்ட்டூமினின் புறநகர்ப் பகுதியில் இராணுவ விமானமொன்று விபத்துக்குள்ளானதில் 46 பேர் உயிரிழந்தனர்.

அந்த விபத்தில் காயமடைந்த 10 பேர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என குறிப்பிடப்படுகிறது.

கார்ட்டூமின் புறநகரான வடக்கு ஓம்டுர்மானில் உள்ள இராணுவ விமான தளத்திலிருந்து புறப்பட்ட நிலையில் இந்த விமானம் விபத்துக்குள்ளானது.

இதனிடையே, உயிரிழந்தவர்களில் கார்ட்டூமின் சிரேஷ்ட இராணுவ தளபதியான மேஜர் ஜெனரல் பஹ்ர் அஹமட்டும் உள்ளடங்குகிறார் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அண்மைய பதிவுகள்