மட்டக்களப்பு, வாழைச்சேனை - புலி பாய்ந்தகல் பகுதியில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுக் காணாமல் போன இருவர் சடலங்களாக மீட்பு

3 months ago



மட்டக்களப்பு, வாழைச்சேனை - புலி பாய்ந்தகல் பகுதியில் நேற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுக் காணாமல் போயிருந்த இருவர் இன்று(26) சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

மேற்படி இருவரும் நேற்று மாலை அந்தப் பகுதியிலுள்ள பாலமொன்றைக் கடப்பதற்கு முற்பட்ட வேளையில், ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.

இந்த நிலையில், காணாமல் போயிருந்த குறித்த இருவரும் இன்று சட லங்களாக மீட்கப்பட்டனர்.

சந்திவெளி பகுதியைச் சேர்ந்த 52 மற்றும் 71 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்தனர் என்று வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

அண்மைய பதிவுகள்