திமிங்கல தோலில் இருந்து பெறப்பட்ட அம்பர் கையிருப்பை 50 மில்லியன் ரூபாவுக்கு விற்பனை செய்ய முயன்ற சந்தேக நபர்கள் கைது
6 months ago

இலங்கையைச் சுற்றியுள்ள ஆழ்கடலில் வாழும் திமிங்கலங்களின் தோலில் இருந்து பெறப்பட்ட அம்பர் கையிருப்பை 50 மில்லியன் ரூபாவுக்கு விற்பனை செய்ய முயன்ற சந்தேக நபர்கள் எல்பிட்டிய பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
வலான மத்திய ஊழல் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த மோசடிக்கு தலைமை தாங்கிய இரண்டு பிரதான சந்தேக நபர்களையும் மேலும் மூன்று சந்தேக நபர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்களிடம் இருந்து 17 கிலோ 234 கிராம் அம்பர் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக பிடிகல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
