
கனடாவில் எட்டு ஆண்டுகளின் பின்னர் உணவுப் பொருள்களின் விலைகளில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னர் முதல் தடவையாக உணவுப் பொருள்களின் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளன.
கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதத்துடன் ஒப்பீடு செய்யும் போது ஜனவரி மாதத்தில் ஒட்டு மொத்த பணவீக்க வீதம் அதிகரித்துள்ளது.
எரிபொருள்களுக்கான விலை அதிகரிப்பு காரணமாக இவ்வாறு பணவீக்கம் அதிகரித்துள்ளது.
எனினும் உணவுப் பொருள்களின் விலைகள் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக உணவகங்களில் விலைகள் கணிசமான அளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
