வவுனியாவில் கனடாவுக்கு அனுப்புவதாக ஒரு கோடியே 10 இலட்சம் ரூபாய் பணத்தை 16 பேரிடம் மோசடி செய்த இளைஞன் கைது

வவுனியாவில் கனடாவுக்கு அனுப்புவதாக கூறி ஒரு கோடியே 10 இலட்சம் ரூபாய் பணத்தை 16 பேரிடம் பெற்று மோசடி செய்ததாக இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வடக்கு மாகாணத்தின் வவுனியா, மன்னார், மாங்குளம், கிளிநொச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களிடம் இளைஞன் ஒருவர் கனடாவில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றுக்கு வேலைக்கு அனுப்புவதாகவும், முதல் கட்டமாக ஒரு தொகைப் பணத்தை தருமாறும், மிகுதிப் பணத்தை கனடா சென்று வேலை செய்து கொடுக்கலாம் எனவும் கூறி பலரிடம் பணம் பெற்றுள்ளார்.
குறிப்பாக ஒவ்வொருவரிடமும் 5 இலட்சம் தொடக்கம் 10 இலட்சம் ரூபாய் வரை பணம் பெறப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பாதிக்கப்பட்ட 16 பேர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் 16 பேரிடமும் ஒரு கோடியே 10 இலட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளார்.
மேலதிக விசாரணையின் பின் குறித்த நபரை நீதிமன்றில் முற்படுத்தியதையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
