ரஷ்ய ரெட்விங் எயார் லைன்சில், 68 ஆயிரம் ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை.-- உதயங்க வீரதுங்க தெரிவிப்பு

ரஷ்யாவுக்கு சொந்தமான ரெட்விங் எயார் லைன்சில், 68 ஆயிரம் ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தரவுள்ளனர் என, ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.
நேற்று முதல், ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் வருகை தருவர்.
மொஸ்கோ உட்பட 6 ரஷ்ய நகரங்களில் இருந்து, வாரத்துக்கு ஆறு விமானங்கள், இலங்கைக்கு வருகை தரவுள்ளன.
எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி வரை, இந்த விமானங்கள், அம்பாந்தோட்டை விமான நிலையத்துக்கு வருகை தரவுள்ளன.
இவ்வாறு வருகை தரும் 68 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் மூலம், இலங்கைக்கு 102 மில்லியன் டொலர் கிடைக்கும்.
2022 இல், ரெட்விங்ஸ் மூலம், 94 ஆயிரத்து 795 சுற்றுலாப் பயணிகளை, எனது காலப் பகுதியில் ரஷ்யாவில் இருந்து கொண்டு வந்தேன்.
மத்தல விமான நிலையம் ஊடாக இலங்கை வந்த இவர்கள் மூலம், 150 மில்லியன் டொலர் வருமானம் கிடைத்தது.
நான் அரசியல் ரீதியாக பழி வாங்கப்பட்டுள்ளேன்.
அந்த வகையில், 9 வருட கால அரசியல் பழிவாங்கலை முடிவுக்கு கொண்டுவர வேண்டிய நேரம் இது-என்றார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
