அமெரிக்கா கனடா மீது வரி விதித்தால் பதிலடி கொடுப்போம்.-- ஒன்றாரியோ மாகாண முதல்வர் டக்போர்ட் தெரிவிப்பு

அமெரிக்கா கனடா மீது வரி விதித்தால் பதிலடி கொடுக்கத் தயங்கப் போவதில்லை என ஒன்றாரியோ மாகாண முதல்வர் டக்போர்ட் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவினால் கனடா மீது வரி விதிக்கப்பட்டால் பதிலடி கொடுக்கத் தயங்கப் போவதில்லை என ஒன்றாரியோ மாகாண முதல்வர் டக்போர்ட் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்ப் கனடாவின் ஏற்றுமதிகள் மீது 25 வீத வரி விதிக்கப்படும் என அறிவித்திருந்தார்.
இந்த வரிவிதிப்பு நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டால் அதற்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என போர்ட் தெரிவித்துள்ளார்.
ட்ரம்ப்பிற்கு வாழ்த்து தெரிவிக்கும் அதேவேளை, வரி விதிக்கப்பட்டால் அதற்கு பதிலடி நடவடிக்கைகளை எடுக்க தயங்கப் போவதில்லை என போர்ட் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவால் ஆரம்பிக்கப்பட்ட வர்த்தக மற்றும் கட்டணப் போர், சீனா மற்றும் சீன ஆதரவு நிறுவனங்களுக்கு மட்டுமே பயனளிக்கும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறான பதிலடி கொடுக்கப்படும் என போர்ட் தனது உரையில் விளக்கவில்லை.
எனினும் மத்திய அரசாங்கத்துடன் கலந்துரையாடி அமெரிக்காவிற்கு பதிலடி வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
