கிண்ணியா குறிஞ்சாக் கேணி பாலம் புனரமைக்க நடவடிக்கை எடுப்பேன் கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரத்னசேகர தெரிவிப்பு

கிழக்கு மாகாண கிண்ணியா மக்களின் தேவை கருதி கிண்ணியா - குறிஞ்சாக் கேணி பாலம் உடனடியாக நிர்மாணம் செய்யப்பட வேண்டியது அத்தியாவசியம்.
எனவே, ஜனாதிபதியிடம் பேசி, இதற்கான நிதியை பெற்றுக் கொள்வதற்கு உரிய நடவடிக்கை எடுப்பேன் என்று கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர தெரிவித்தார்.
திருகோணமலை, கிண்ணியாவுக்கு நேற்று முன்தினம் பயணம் மேற்கொண்டு குறிஞ்சாக் கேணி பாலத்தை பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே ஆளுநர் இவ்வாறு குறிப்பிட்டார்.
கடந்த 2011 ஆம் ஆண்டு ஏற்பட்ட படகு விபத்து அனர்த்தத்தால் 8 பேரை பலி கொடுத்தும், இன்று வரை இந்தப் பாலம் நிர்மாணிக்கப்படாமல் இருப்பது எனக்கு கவலை அளிக்கிறது.
இந்தப் பாலம் உடனடியாக நிர்மாணம் செய்யப்பட வேண்டும்.
அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஜனாதிபதியுடன் பேசி தேவையான நிதியைப் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன் என்பதை இந்த மக்களுக்கு கூறிக்கொள்ள விரும்புகிறேன்”- என்றார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
