பிரித்தானியாவின் இந்தோ - பசுபிக் பிராந்தியத்துக்கான வெளியுறவுச் செயலர் கத்தரின் வெஸ்ட் இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.

3 months ago



பிரித்தானியாவின் இந்தோ - பசுபிக் பிராந்தியத்துக்கான வெளியுறவுச் செயலர் கத்தரின் வெஸ்ட் இரண்டுநாள் உத்தியோகபூர்வமான பயணம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.

எதிர்வரும் 26ஆம் திகதி திங்கட்கிழமை இலங்கைக்கு வருகைதரும் அவர், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்டவர்களைச் சந்தித்து உரையாடவுள்ளார்.

அதனைத் தொடர்ந்து சில பிரதான அரசியல்கட்சிகளின் பிரதான பிரமுகர்களையும் சந்திக்கவுள்ள அவர், சிவில் அமைப்புகளின் தலைவர்களையும் சந்திக்கவுள்ளார்.

பின்னர் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்து, வடக்கு மாகாண ஆளுநர், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள். யாழ். வர்த்தக சங்கத்தினர் மற்றும் சிவில் தரப்பினர் உள்ளிட்டவர்களைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

தொடர்ந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் எஸ். சிறீசற்குணராஜாவுடன் சந்திப்பில் ஈடுபடவுள்ள அவர், யாழ். பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள தரைக்கீழ் நீர் மற்றும் காலநிலை மாற்றம் சம்பந்தமான நிகழ்விலும் பங்கேற்கவுள்ளார்.

அண்மைய பதிவுகள்