

சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட அரிசிப்பொதிகள், கிளிநொச்சி - கரைச்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வாழும் கடற்றொழிலாளர்களுக்கு கையளிக்கப்பட்டன.
குறித்த நிகழ்வானது, இன்று (26.07.2024) பிற்பகல் 1:30 மணியளவில் பரந்தன் பகுதியில் அமைந்துள்ள பலநோக்கு கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட அரிசிப்பொதிகள் பல்வேறு பகுதிகளிலும் உள்ள கடற்றொழிலாளர்களுக்கும் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், இன்று தட்டுவன்கொட்டி, நாகேந்திரபுரம், புளியம்பொக்கணை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த கடற்றொழிலாளர்களுக்கு இந்த அரிசிப் பொதிகள் வழங்கப்பட்டுள்ளன.
அதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரி பிரதேசத்துக்கு உட்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு நேற்றைய தினம் குறித்த அரசிப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
