IMF இன் தேவைக்கேற்பவே தற்போதைய அரசு செயற்பட்டு வருகிறது.-- பத்தரமுல்லே சீல ரத்ன தேரர் குற்றச்சாட்டு

4 months ago



சர்வதேச நாணய நிதியத்தின் தேவைக்கேற்பவே தற்போதைய அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது என்று பத்தரமுல்லே சீல ரத்ன தேரர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நாட்டு மக்கள் எதிர்காலத்தில் விளக்குமாற்றை கையில் எடுக்கும் வகையில் அரசாங்கம் செயற்படக் கூடாது என குறிப்பிட்டு ஊடக சந்திப்புக்கு விளக்குமாற்றையும் தேரர் எடுத்து வந்திருந்தார்.

அவர் மேலும் கூறியவை வருமாறு-

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை ஏற்கமாட்டோம் எனக் கூறிவந்த அரசாங்கம் தற்போது சர்வதேச நாணய நிதியத்தின் தேவைக்கேற்பவே செயற்பட்டு வருகின்றது.

அவ்வாறு செயற்பட வேண்டாம் என அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.

தற்போதைய அரசாங்கம் பொய்யுரைத்தே ஆட்சியை பிடித்துள்ளது.

தற்போது நீதிமன்ற உத்தரவுகளும் மீறப்படுகின்றன.

நீதிமன்ற உத்தரவுக்கமையவே ஊடகவியலாளர் சமுதித்தவுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.  அந்த பாதுகாப்பு தற்போது நீக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவுக்கமையவா இதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டதா அல்லது காட்டுச் சட்டம் பயன்படுத்தப்பட்டதா என்பது பற்றி அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் - என்றார். 

அண்மைய பதிவுகள்