மன்னார் போராட்டத்தில் வன்முறையை தூண்டியவர்களைத் தேடும் பொலிஸார்!

5 months ago




மன்னார் போராட்டத்தில் வன்முறையை தூண்டியவர்களைத் தேடும் பொலிஸார்!

மன்னார் பொது வைத்தியசாலையில் இறந்த இளம் தாயின் மரணத்திற்கு நீதி கோரி கடந்த 20 ஆம் திகதி மாலை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன் அமைதியாக இடம்பெற்ற மக்கள் போராட்டத்தில் பொதுச் சொத் துக்களை சேதப்படுத்தி வன்முறையை தூண்டும் விதமாகச் செயற்பட்ட நபர்களை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக வைத்தியசாலைக்குள் நுழைந்து கண்ணாடிகளை சேதமாக்கியவர்கள், பொலிஸார் மீது கற்கள் வீசியவர்கள், ரயர்கள் உள்ளிட்ட பொருட்களை வீதிகளில் எரித்து மக்களின் போராட்டத்தை திசை திருப்பியவர்களைக் கைது செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

வைத்தியசாலையின் சி.சி.ரி.வி. கமெராக்கள் மற்றும் போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட காணொளிகளை சேகரித்து அதன் ஊடாக அமைதியான போராட்டத்தை திசை திருப்பி வன்முறையைத் தூண்டியவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், அவர்களை கைது செய்ய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.