மும்பை கடற்பகுதியில் இந்திய கடற்படை படகு ஒன்று பயணிகள் கப்பல் மீது மோதியதில் 13 பேர் உயிரிழந்தனர்.
4 months ago




இந்தியா மும்பை கடற்பகுதியில் இந்திய கடற்படை படகு ஒன்று பயணிகள் கப்பல் மீது மோதியதில் ஏற்பட்ட விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் இந்திய கடற்படையைச் சேர்ந்த 3 பேரும் அடங்குகின்றனர் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேற்படி கடற்படை கப்பல் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் பயணிகள் கப்பலின் மீது மோதியதால், விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்துக்குள்ளான பயணிகள் கப்பலில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்களை மீட்கும் பணியில் அந்நாட்டு கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
கடற்படைக் கப்பலின் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதுடன், இது தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
