க.பொ.த உயர்தரம் மற்றும் முதலாம் தரம் முதல் 11ஆம் தரம் வரை கல்வி கற்கும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் மூலம் வழங்கப்படும் புலமைப்பரிசில் உதவித் தொகையை இன்று வெள்ளிக்கிழமை முதல் மாவட்ட மட்டத்தில் செயல்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதன்படி, பதுளை, மாத்தளை மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் நாளை 13ஆம் திகதியும் கிளிநொச்சி மாவட்டத்தில் நாளை மறுதினம் 14 ஆம் திகதியும், வவுனியா, மட்டக்களப்பு, இரத்தினபுரி, கேகாலை, நுவரெலியா, களுத்துறை, மன்னார், அம்பாறை, குருநாகல், கண்டி மாவட்டங்களில் எதிர்வரும் 17ஆம் திகதியும் முல்லைத்தீவு, திருகோணமலை, பொலன்னறுவை மாவட்டங்களில் எதிர்வரும் 18ஆம் திகதியும் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 15ஆம் திகதியும், கம்பஹா மாவட்டத்தில் 16, 17ஆம் திகதிகளிலும், காலி மற்றும் அநுராதபுரம் மாவட்டங்களில் எதிர்வரும் 15, 16ஆம் திகதிகளிலும், மொனராகலை, மாத்தறை மாவட் டங்களில் 19ஆம் திகதியும், புத்தளம் மாவட்டத்தில் 22ஆம் திகதியும் புல மைப் பரிசில்களை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
