வவுனியா பேராறு நீர்த்தேக்கத்தின் வான் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நபர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
4 months ago

வவுனியா பேராறு நீர்த்தேக்கத்தின் வான் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நபர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றது.
நேற்று மாலை பேராறு நீர்த்தேக்கத்தின் வான் பகுதியில் நபர் ஒருவர் மீன்பிடித்துக் கொண்டிருந்த நிலையில் நீருக்குள் தவறி வீழ்ந்து மூழ்கியுள்ளார்.
இதனை அவதானித்த மற்றொரு நபர் சம்பவம் தொடர்பாக ஊர் மக்களுக்கு தெரியப்படுத்தினார்.
இதனையடுத்து குறித்த நபரை தேடும் பணி ஊர் மக்களால் முன்னெடுக்கப்பட்டது.
நீண்ட நேரமாக தேடுதல் இடம்பெற்று வந்த நிலையில் சில மணிநேரங்களின் பின்னர் அவரது சடலம் நீருக்குள் இருந்து மீட்கப்பட்டது.
சம்பவத்தில் தரணிக்குளம் பகுதியைச் சேர்ந்த குரு என்ற இரு பிள்ளைகளின் தந்தையே சாவடைந்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக ஈச்சங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
