


வடமாகாண பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக இன்று (16) கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அனைத்து பட்டதாரிகளுக்கும் பாரபட்சமின்றி வேலை வாய்ப்பை வழங்க வேண்டுமென இதன்போது வேலையில்லா பட்டதாரிகள் வலியுறுத்தியிருந்தனர்.
மேலும், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், “பட்டம் வீட்டில் பட்டதாரிகள் நடுரோட்டில், ஒரே ஒரு பரீட்சையில் பறந்து போனது பல பரீட்சை எழுதிப் பெற்ற பட்டம், வேண்டும் வேண்டும் நீதி வேண்டும், எமக்கான வாழ்க்கையை நாம் எப்போது வாழ்வது?, படிப்பிற்க்கும் போராட்டம் வேலைக்கும் போராடுவதா?, எல்லோருக்கும் பாரபட்சமின்றி வேலைகளை வழங்க வேண்டும், படித்ததக்கு கூலிதொழிலா கடைசி வரைக்கும்?, படித்தவர்கள் இந்த நாட்டின் சாபக்கேடுகளா?, பல வருட கனவு வெறும் கனவாகவே போய்விடுமா?, படித்தும் பரதேசிகளாக திரிவதா?” என பல்வேறுப்பட்ட வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
