யாழ்.வடமராட்சி கட்டைக்காடு பகுதியில் இளைஞன் ஒருவர், ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்ப்பு

யாழ்.வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் கடற்றொழிலுக்காக வந்திருந்த இளைஞன் ஒருவர், ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றது.
கண்ணகி நகர் விசுவமடுவைச் சேர்ந்த 23 வயது இளைஞனே இவ்வாறு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டவர்.
கட்டைக்காடு பகுதியில் கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த்தாகவும் நேற்று முன்தினம் இரவு குறித்த இளைஞன்மீது வீதியில் வைத்து இனந்தெரியாத நபர்கள் தாக்கியதாகவும் இதனால் சுயநினைவிழந்து - விழுந்து கிடந்த நிலையில் மீட்கப்பட்டு மருதங்கேணி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பருத்தித்துறை ஆதார மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மருதங்கேணிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
