13ஆவது திருத்தச் சட்டத்திலுள்ள பல விடயங்களை எடுக்கின்றபோது அந்தச் சட்டமே இல்லாமல் போகும் எம்.பி க.கோடீஸ்வரன் தெரிவிப்பு

13ஆவது திருத்தச் சட்டத்திலுள்ள பல விடயங்களை எடுக்கின்றபோது அந்தச் சட்டமே இல்லாமல் போகும் துர்ப்பாக்கிய நிலை ஏற்படுமென இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நேற்றைய பாராளுமன்ற அமர்வில் உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்-
உயிரற்ற நிலையில் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் காணப்படுகின்றன.
அவற்றுக்கு உயிர் கொடுக்க வேண்டிய கடமை இருக்கின்றது.
புதிதாக வந்த அரசாங்கம் இந்த விடயத்தில் கவனத்தைச் செலுத்தும் என்ற நம்பிக்கை இருக்கின்றது.
13ஆவது திருத்த சட்டத்திலுள்ள காணி,பொலிஸ் அதிகாரங்கள் ஏற்கனவே இருந்த அரசாங்கத்தினால் எடுக்கப்பட்டு விட்டன.
அது பெரிய தவறாகக் காணப்படுகின்றது.
இதனால் 13ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக இல்லாமல் போகும் நிலை உருவாகும்.
அதனால் பாதிக்கப்படப்போவது வடக்கு-கிழக்கில் உள்ள மக்கள்.
சதொச நிறுவனங்கள் தற்போது இல்லாமல் போய்விட்டன.
அதனால், பலநேக்குக் கூட்டுறவுச் சங்கங்களுக்கு மீள உயிர் கொடுங்கள் - என்றார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
